Published : 01,Jul 2017 10:25 AM
இரட்டை கொலை வழக்கில் தாய், மகன் கைது

சொத்து தகறாறு காரணமான ஈரோடு அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர்.
சித்தோடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் அவரது தாயார் பாவாயி சில நாட்களுக்கு முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று பழனிச்சாமிக்கும் அவரது மனைவி கோமதிதேவி மற்றும் மகன் சந்தோஷ்குமார் ஆகியோருக்கும் இடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பதிவு செய்வது தொடர்பாக தகறாறு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த கோமதிதேவியும், சந்தோஷ்குமாரும் சேர்ந்து கைதுப்பாக்கியால் பழனிச்சாமியையும், பாவாயியையும் சுட்டு கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.