Published : 01,Sep 2020 01:02 PM
ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் !

ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் தேதி அயனாவரத்தில் ரவுடி சங்கரை பிடிக்கச்சென்ற போது காவலர் முபாரக் என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை எழும்பூர் 5-வது மாஜிஸ்திரேட் சிவ சக்திவேல் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் என்கவுண்ட்டர் வழக்கை சிபிசிஐடிக்கு பரிந்துரை செய்து சென்னை போலீசார், டிஜிபிக்கு அனுப்பினர்.இதனையடுத்து ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.