[X] Close

தமிழ் சினிமாவை தண்டிக்கும் அரசு: சித்தார்த் காட்டம்!

Actor-Siddharth-Comments-on-Tamilnadu-Government-about-GST

தமிழ் சினிமாவை தமிழக அரசு பல ஆண்டுகளாக தண்டித்து வருகிறது என நடிகர் சித்தார்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜிஎஸ்டி வரி அமலாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு சினிமாவுக்கு நகராட்சி வரி 30 சதவீதம் கட்ட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைக் கண்டித்து திங்கட்கிழமை முதல் தியேட்டர்களை மூட முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர், தமிழ் சினிமாவை பல ஆண்டுகளாக தமிழக அரசு தண்டித்து இருக்கிறது. யு சான்றிதழ் வழங்குவதற்கும், வரி விலக்கு பெறவும் ஊழல்கள். இது போதாதென்று இப்போது 30 சதவிகித வரியுடன் ஜிஎஸ்டி வேறா? வெட்கக்கேடு’ என்று கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close