ரஷ்யாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியிலிருந்து இந்தியா விலகியதை அடுத்து, பாகிஸ்தான் மற்றும் சீனா அப்பயிற்சியில் இணைந்துள்ளன.
ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் ராணுவமும் பல்வேறு கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ‘கவ்காஷ் 2020’ என்ற என்ற கூட்டு ராணுவப் பயிற்சியில் ரஷ்யா மற்றும் வேறொரு நாட்டுடன் இணைந்து இந்தியா செப்டம்பர் மாதம் பயிற்சி மேற்கொள்ள இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த பயிற்சியை தவிர்ப்பதாக இந்திய ராணுவத்துறை அறிவித்தது. அத்துடன் மேலும் சில சர்வதேச கூட்டுப்பயிற்சிகளை இந்திய ராணுவம் கைவிட்டது.
ரஷ்யாவுடனான கூட்டுப் பயிற்சியில் இருந்து இந்தியா விலகியதைத் தொடர்ந்து, ‘கவ்காஷ் 2020’ கூட்டுப் பயிற்சியில் ரஷ்யாவுடன் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடனான மோதல் போக்கு இன்னும் முடிவுக்கு வராத காரணத்தினால் கூட்டுப் பயிற்சியில் இருந்து இந்தியா விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன.
அத்துடன் லடாக் எல்லையில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாதுகாப்பை இந்தியா பலப்படுத்த முடிவு செய்திருப்பதால், ராணுவ வீரர்களை பயிற்சிக்கு அனுப்புவதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai