
தமிழகத்திலேயே பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் உள்ளது. ராஜப்பாளையம், சிப்பிப்பாறை போன்ற இந்திய இனத்தை சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்கவேண்டும் என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி “ தமிழகத்திலேயே பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது. விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்விக்கொள்கையில் ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. ராஜப்பாளையம், சிப்பிப்பாறை போன்ற இந்திய இனத்தை சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்கவேண்டும்” என்று பேசியுள்ளார்.