Published : 30,Jun 2017 09:18 PM

ஸ்பின்னர்கள் அசத்தல்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்திய அணி

India-beat-West-Indies-by-93-runs-in-third-ODI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

நார்த் சவுண்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, தோனி மற்றும் ரஹானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. 252 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கரும் நெருக்கடி கொடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 38.1 ஓவர்களில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஜேசன் முகமது 40 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்