[X] Close

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் தோனி படைத்த சாதனை

MS-Dhoni-becomes-first-Indian-batsman-to-hit-200-sixes-in-ODIs

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் தோனி படைத்தார்.


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் குவித்த தோனி, இந்திய அணி 250 ரன்களைக் கடக்க உதவினார். பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்கத் தடுமாறும் ஆடுகளத்தில், மெதுவாக தனது இன்னிங்ஸைத் தொடங்கிய தோனி, இறுதி ஓவர்களில் விஸ்வரூபம் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 40 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் என்ற நிலையில் இருந்த இந்திய அணி, தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரின் அதிரடியால் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 100 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அஜிங்கியா ரஹானே 72 ரன்களும், கேதர் ஜாதவ் 40 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  


Advertisement

Advertisement
[X] Close