
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் -19 வார்டில் உள்ள கழிப்பறையை புதுச்சேரி சுகாதார அமைச்சர் மல்லடி கிருஷ்ணராவ் நேற்று சுத்தம் செய்தார்.
மல்லாடி கிருஷ்ணராவ் மருத்துவமனையில் கோவிட்-19 வார்டுகளை பரிசோதித்தபோது, கழிப்பறைகள் அசுத்தமாக உள்ளது என்று நோயாளிகள் புகார் தெரிவித்தனர். உடனே அவர் துப்புரவு தூரிகை மற்றும் திரவத்தைக் எடுத்துக்கொண்டு கழிப்பறைக்குள் சென்று தானே சுத்தம் செய்யத் தொடங்கினார். 75 நோயாளிகள் கொண்ட வார்டில் ஒரு நாளைக்கு மூன்று முறை கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டாலும், சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை இருப்பதால் பராமரிப்பு கடினமாகிறது. எனவே நோயாளிகள் அனைவரும் கழிவறைகளை சுத்தமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற வகை ஊழியர்களை உள்ளடக்கிய 458 சுகாதார ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அதனால் அடுத்த வார இறுதிக்குள் போதுமான பணியாளர்கள் இருப்பார்கள் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.