Published : 29,Aug 2020 07:36 PM
செவ்வாய் கிரகத்தில் டிராகன் வடிவில் பள்ளத்தாக்கு - நாசா வெளியிட்ட புகைப்படம்

எப்போதுமே சிவப்புகிரகமான செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் கவர்ச்சிகரமானதாகத்தான் இருக்கும். சமீபத்தில் நாசா வெளியிட்ட படமும் அவற்றில் ஒன்றுதான். ஆனால் யாரும் கண்டிராத அதே சமயம் மிகவும் பிரபலமான ஒரு மிருகத்தின் உருவம் வைரலாகியுள்ளது
நாசாவிலிருந்து செவ்வாய் கிரகத்தை கூர்மையாக கவனிக்கும், ஹைரிஸ் கேமிரா, மெலாஸ் சாஸ்மா பள்ளத்தாக்கு டிராகன் வடிவில் இருப்பதை படம் பிடித்துள்ளது என நாசா டிவீட் செய்துள்ளது. விண்வெளி ஏஜென்ஸி வலைப்பதிவின் படி, மெலாஸ் சாஸ்மாதான் செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஆகும்.
பதிவாகியுள்ள இந்த பகுதி குறுக்கே அரை மைல் தூரம் அதாவது சுமார் 1 கிமீ உள்ளதாக அந்த டிவீட்டில் குறிப்பிட்டுள்ளது. பகிரப்பட்ட சிறிதுநேரத்திலேயே அதிக லைக்குகளை பெற்றுள்ள
The sharp-eyed HiRISE camera aboard our Mars Reconnaissance Orbiter captured this “dragon” patrolling the canyon floor of Melas Chasma. ? The area shown is just over half a mile (about one kilometer) across. Details: https://t.co/s7oPfBunrZpic.twitter.com/P75hIKD1a3
— NASA Mars (@NASAMars) August 28, 2020
செவ்வாய் கிரகத்தின் இந்த புகைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட பலரும், ‘அற்புதமான புகைப்படம்! செவ்வாய் கிரகம் அதன் அழகான சூழலால் மனிதர்களை ஆச்சர்யப்படுத்துகிறது’, ‘டிராகன் டிராகன் டிராகன்’ என்பது போன்ற பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.