Published : 20,Jan 2017 03:29 PM
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஸ்காட்லாந்தில் அமைதி போராட்டம்

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் அமைதிப் போராட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டிற்கான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து, ஸ்காட்லாந்தில் வாழும் தமிழர்கள் அங்குள்ள எடின்பர்க் நகரில் அமைதிப் போராட்டத்தை நடத்தினர். ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான பதாகைகளை கையில் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.