[X] Close

மூளைச்சாவு அடைந்தவரின் நுரையீரலை கொரோனா நோயாளிக்கு பொருத்திய சென்னை மருத்துவர்கள்.!

சுற்றுச்சூழல் & சுகாதாரம்

Chennai-doctors-perform-Asia---s-first-lung-transplant-on-Covid-19-patient

சென்னை தனியார் மருத்துவமனையில் கோவிட் -19 பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக  செய்யப்பட்ட நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட நபர் ஐ.சி.யுவில் நன்றாக இருக்கிறார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

சென்னை தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 34 வயது நபரின் மனைவி, பல்வேறு நோயாளிகளுக்கு தன் கணவரின் இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் தோலை தானம் செய்ய ஒப்புக்கொண்டார். ஜனவரி 12,2014 அன்று கட்கோபரில் நடந்த ரயில் விபத்தில் கைகளை இழந்த  பெண்ணுக்கு வழங்குவதற்காக இவரின் கைகள் மும்பைக்கு விமானம் மூலமாக கொண்டு செல்லப்பட்டன. சென்னை குளோபல் மருத்துவமனை கல்லீரலைத் தானமாக பெற்றுக்கொண்டது. இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகள் எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு தானமாக வழங்கப்பட்டன.


Advertisement

தானமாக பெறப்பட்ட நுரையீரல்  48 வயதான கொரோனாவில் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. கோவிட் -19 பாதிக்கப்பட்ட நபருக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக  செய்யப்பட்ட நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 27 ஆம் தேதி செய்யப்பட்டது அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட நபர் ஐ.சி.யுவில் நன்றாக இருக்கிறார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 “ஜூன் 8 ஆம் தேதி கோவிட் -19 பாதிக்கப்பட்டு ஃபைப்ரோஸிஸ் காரணமாக நோயாளியின் நுரையீரல் கடுமையாக சேதமடைந்தது, இதனால் இவரின் நுரையீரலில் ஒரு சிறிய பகுதி மட்டுமே செயல்பட்டு வந்தது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டதால் ஜூன் 20  ஆம் தேதி முதல் வென்டிலேட்டர் அளிக்கப்பட்டது. ஆனாலும் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், ஜூலை 20 ஆம் தேதி காசியாபாத்தில் இருந்து எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு அந்த நோயாளி விமானத்தில் கொண்டுவரப்பட்டார்” என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 “அவரது நுரையீரல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், ஜூலை 25 அன்று ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் எக்மோ சிகிச்சையில் இருந்தார். ஆரம்பத்தில் அவரது சிகிச்சைப்பற்றி எங்களிடம் குறிப்பிடப்பட்டபோது நாங்கள் ஒரு குழப்பத்தில் இருந்தோம். பிறகுதான் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம். எங்கள் மருத்துவர்கள் குழு மற்றும் பிற உதவி ஊழியர்கள் சவாலை ஏற்றுக்கொண்டு, தங்கள் சொந்த உடல்நலம் மற்றும் ஆபத்து பற்றி சிந்திக்காமல், ஒரு உயிரைக்காப்பாற்ற துணிவுடன் பணி செய்தோம். மாற்றம் செய்யப்பட்ட நுரையீரல் நன்றாக செயல்படுவதால் நோயாளியைவிடவும்  நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்கிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இருதய அறிவியல் தலைவரும் இயக்குநரும் இதய மற்றும் நுரையீரல் மாற்று திட்டத்தின் இயக்குநருமான டாக்டர் கே ஆர் பாலகிருஷ்ணன்.


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close