Published : 29,Aug 2020 12:46 PM
அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் - உள்துறை அமைச்சக அதிகாரி தகவல்!

அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே அமைச்சக பணிகளை கவனிப்பார் என்று உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். அதன்பின்னர் உடல் சோர்வு உள்ளிட்ட சில காரணங்களுக்காக கடந்த 18-ம் தேதி அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அமித்ஷா நலமுடன் இருப்பதாகவும், ஓய்வும் சிறப்புக் கவனமும் தேவைப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே அமைச்சக பணிகளை அவர் கவனிப்பார் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.