இந்தியா விமானப் படையில் முறைப்படி சேரவுள்ள ரபேல் !

இந்தியா விமானப் படையில் முறைப்படி சேரவுள்ள ரபேல் !
இந்தியா விமானப் படையில் முறைப்படி சேரவுள்ள ரபேல் !

ரபேல் போர் விமானங்கள் வருகிற 10-ஆம் தேதி முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்சிடமிருந்து வாங்கப்படும் 36 ரபேல் போர் விமானங்களில் 5 விமானங்கள் கடந்த மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன. ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டாலும் இன்னும் முறைப்படி இணைக்கப்படவில்லை.

எனவே முறைப்படி விமானப்படையில் இணைக்கும் நிகழ்ச்சியை வருகிற 10ஆம் தேதி நடத்துமாறு பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு விமானப்படை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு ரபேல் விமானங்களை முறைப்படி விமானப்படையில் சேர்த்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com