அம்பத்தூரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தியது தொடர்பாக வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பத்தூர், ஒரகடம், வடிவேல்முதலி தெருவில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இதை சென்னை, வண்ணாரப்பேட்டை, வ.உ.சி நகரை சேர்ந்த சதீஷ் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடைபெற்று வருவது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய 5 இளம் பெண்களை மீட்டு, மயிலாப்பூரில் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
அதன்பிறகு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் போலீசார், இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சதீஷை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Loading More post
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்