Published : 29,Aug 2020 08:28 AM
இவான்காவை வாழ்த்தியபின் முகபாவனையை கடுமையாக்கிய மெலனியா ட்ரம்ப் - வைரல் வீடியோ

ட்ரம்பின் மகள் இவான்காவை அவருடைய சித்தியான மெலனியா வாழ்த்திய பின், முகபாவனையை கடுமையாக மாற்றிக் கொண்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு வடக்கு கரோலினாவின் சார்லட் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நட்சத்திர
பேச்சாளர்கள் இந்ந மாநாட்டில் பங்கேற்று ட்ரம்ப்புக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிபர் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ட்ரம்பின் மகள் இவான்காவை அவருடைய சித்தியான மெலனியா வாழ்த்தும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தனது தந்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆலோசகராக பணியாற்றும் இவான்காவை வாழ்த்திய பின்னர் மெலனியா தனது முகபாவனையை கடுமையாக மாற்றிக்கொண்டார். அப்போது ட்ரம்ப் உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்தது பார்வையாளர்களை உருக வைத்தது.