Published : 20,Jan 2017 02:22 PM
முன் கூட்டியே வருகிறார் ஆளுநர்..!

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்து ஆலோசிக்க தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்கூட்டியே நாளை சென்னை வருகிறார்.
ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுப்பியுள்ள அவசரச் சட்டத்துக்கான வரைவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. வரைவானது தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவரசச் சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்து ஆலோசிக்க தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்கூட்டியே நாளை சென்னை வருகிறார். முன்னதாக அவர் ஞாயிற்றுக்கிழமை அன்றே சென்னை வர திட்டமிட்டிருந்தார். எனவே ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.