Published : 28,Aug 2020 07:10 AM

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நூலகங்கள் செயல்பட அனுமதி !

Library-in-Tamil-Nadu-to-be-reopen-from-September-1st

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

image

இது குறித்து நூலகத்துறை வெளியிட்ட அறிவிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பொது நூலகங்களுக்கு வர அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.  மேலும் சில விதிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  • பகுதி நேர நூலகங்களை திறக்க அனுமதியில்லை
  • அனைத்து நூலகங்களிலும் நாளிதழ்கள் பிரிவுக்கு அனுமதியில்லை
  • நூலகர்கள் / நூலக பணியாளர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிவது அவசியம்
  • வாசகர்கள் கேட்கும் நூல்களை நூலடுக்குகளில் இருந்து நூலக பணியாளர்கள் தான் எடுத்து கொடுக்க வேண்டும்
  •  15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் , 65 வயது மேல் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நூலகத்தின் உள் அனுமதி இல்லை 

 

 

கொரோனா பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பொது நூலகங்கள் மீண்டும் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்