Published : 27,Aug 2020 01:05 PM

ரியாவுக்கு போதை கும்பலுடன் தொடர்பா ? பாலிவுட் நடிகர், நடிகைகளிடம் விசாரணை !

CBI-decided-to-have-enquiry-with-bollywood-stars-in-connection-with-drugs

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா என விசாரணை நடத்த போதை தடுப்பு பிரிவுனர் முடிவு செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்கரவர்த்தியின் சில வாட்ஸ் அப் உரையாடல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு போதை தடுப்புப் பிரிவு காவல்துறையை அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டது.

image

இதையடுத்து விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு காவல் துறை, ரியா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் ரியா, போதைப் பொருள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவரா? என்பது பற்றியும் விசாரிக்கப்படும் என போதைப் பொருள் தடுப்பு காவல்துறை தலைவர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா என விசாரணை நடத்தவும் போதை தடுப்பு பிரிவுனர் முடிவு செய்துள்ளனர். இதற்காக டெல்லியிலிருந்து ஒரு குழுவினர் மும்பை விரைந்துள்ளனர். இதனிடையே தனது மகனை நீண்டநாட்களாக சிறிது சிறிதாக விஷம் கொடுத்து ரியா கொலை செய்துவிட்டதாக, சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்