உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் பணிபுரியும் மருத்துவர் ஸ்வேதா மகேஸ்வரி மற்றும் குழந்தைகள் மருத்துவர் சங்கேத் தியாகி ஆகியோர் கொரோனா வார்டில் பணிபுரிவதால் கடந்த ஐந்து மாதங்களாக தங்களது இரண்டு வயது மகனை பிரிந்து உள்ளனர்.
இவர்கள் இருவரும் எல்.எல்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் கோவிட்-19 வார்டில் பணியில் உள்ளனர். அதனால் மார்ச் முதல் வாரத்தில், இந்த மருத்துவர் தம்பதியினர் தங்கள் குடும்ப வீட்டை விட்டு வெளியேறி வாடகைக்கு வீடு எடுத்து தங்க ஆரம்பித்தனர், இதனால் தங்கள் குழந்தை குஷாகிராவை தனது தாத்தா பாட்டியுடன் இருக்க வைத்துள்ளனர்.
"எங்கள் குழந்தை அல்லது பெற்றோருக்கு எங்களால் வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது. ஆனால் அதே நேரத்தில், நாங்கள் எங்கள் கடமையையும் செய்ய வேண்டும், எனவே நாங்கள் எங்கள் மகனை பிரிந்து தனியாக வாடகை வீட்டிற்கு சென்றோம்" என்கிறார் மகேஸ்வரி. "நான் தினமும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை கையில் ஏந்துகிறேன், ஆனால் என் சொந்த குழந்தை ஐந்து மாதங்களாக என்னிடமிருந்து விலகி இருப்பது மிகுந்த வேதனையாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.
“தினமும் வீடியோ காலில் தொலைபேசி அழைப்புகள் மூலமாக குழந்தையிடம் பேசுவோம்.கடந்த ஐந்து மாதங்களில் நாங்கள் எங்கள் மகனை ஒரு சில முறை மட்டுமே நேரில் சந்தித்தோம். அப்போதும் நானும் என் மனைவியும் ஒரு காரில் அமர்ந்திருப்போம், எங்கள் மகன் மற்றொரு காரில் தாத்தா பாட்டிகளுடன் அமர்ந்திருந்தான்" என்று தியாகி கூறினார்.
மகேஸ்வரியைப் பொறுத்தவரை பல மாதங்களாக தனது குழந்தையைப் பார்க்காததால் கடும் மன அழுத்ததில் உள்ளார். இதனால் அவர் வேலையை விட்டு வெளியேறவும் முடிவு செய்தார், ஆனால் கொரோனா தடுப்புப்பணிக்கு மருத்துவர்கள் அதிகளவில் தேவைப்படும் இந்த நெருக்கடியான சூழலில் பணியிலிருந்து விலகுவது தவறான எண்ணம் என்று நினைத்து பணியில் தொடர்வதாக கூறுகிறார் ”நாங்கள் போனில் அழைக்கும்போது குஷாக்ரா இப்போது அழுகிறான். அவனை விரைவில் பார்ப்போம், ஆனால் அது எப்போது என்றுதான் தெரியவில்லை என்கிறார் மகேஸ்வரி கலங்கியபடியே
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!