மதுரை அலங்காநல்லூரில், 27 ஆண்டுகளாக குழந்தைகளைபோல் நாய்களை பெண்மணி ஒருவர் வளர்த்து வருகிறார்.
அதிக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணி என்றால் அது நாய்தான். வளர்க்கும் எஜமானர்களின் வீட்டில் உள்ளவர்களை உயிரையும் கொடுத்து பாதுகாக்கும் காவலனாக விளங்கும் நாய்களை நன்றிக்கு உதாரணமாக கூறுவார்கள். அப்படி தெருவில் திரியும் நன்றியுள்ள நாய்களை மீட்டு அதற்கு உணவளித்து பாதுகாப்போடு வளர்த்து வருகிறார் அலங்காநல்லூர் புஷ்பம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் புஷ்பம் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக தெருக்களில் உணவின்றி திரியும் நாய்களை கண்டறிந்து அதை தன் வீட்டிற்கு கொண்டுவந்து, உணவு இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி பராமரித்து வருகிறார்.
வெளியூரில் வேலை பார்க்கும் கணவர். அதேபோல வெளியூரில் படிக்கும் குழந்தைகள் என வீட்டில் யாரும் இன்றி தனிமையில் இருந்துள்ளார் புஷ்பம். இந்த தனிமையை தவிர்க்க ஒரு நாய் குட்டியை வளர்க்க துவங்கினார். இந்த பாச பயணம் இன்றுவரை தொடர்வதாக கூறுகிறார்.
15-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்துவரும் இவர், நாய்களுக்குக்கென தனிவீடு அமைத்தும் சத்து மிகுந்த உணவுகளை தயார்செய்து வழங்கி வருகிறார். தான் வளர்க்கும் நாய்கள் வயது முதிர்வால் இறக்கும்போது உரிய இறுதி சடங்குகளை செய்து அடக்கம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரிடம் இத்தனை நாய்கள் இருந்தும் இவைகள் ஒருநாளும் ஒருவரையும் தேவையில்லாமல் துரத்தியதோ, கடித்ததோ இல்லை என கூறும் புஷ்பம், இப்பகுதிக்கு புதிதாக யாரேனும் சந்தேகப்படும்படி வந்தால், ஒன்றுகூடி ஊரையே கூப்பிட்டுவிடும் என்றார். தான் அன்பு செலுத்தும் பிள்ளைகளாகவும் ஊர் காவலர்களாகவும் நாய்களை பராமரித்து பாதுகாத்து வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!