‘என்னை மாற்றும் காதலே’ குரலால் மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்த திருமூர்த்தி - வைரல் வீடியோ

‘என்னை மாற்றும் காதலே’ குரலால் மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்த திருமூர்த்தி - வைரல் வீடியோ
‘என்னை மாற்றும் காதலே’ குரலால் மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்த திருமூர்த்தி - வைரல் வீடியோ

தமிழ் பாடல்களை தனது தனித்துவமான குரலால் பாடு பலரின் பாராட்டுகளைப் பெற்றவர் பாடகர் திருமூர்த்தி. இவர் பார்வைக் குறைபாடுள்ளவர். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘நானும் ரௌடி தான்’ படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ‘என்னை மாற்றும் காதலே’ பாடலை இவர் பாடியுள்ளார்.

இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். "Beautiful brother, god bless" என விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடலால் திருமூர்த்தி சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரபல இசையமைப்பாளர் இமான் இவரை ’சீறு’ படத்தில் பின்னணி பாடகராக அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.


திருமூர்த்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய பாட்டுத் திறமைக்காக இவர் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலை இவர் பாடியதற்குப் பிறகு ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com