‘சைகையால் அனைத்தையும் பேசி விடுவார் தோனி’ சிலிர்க்கும் மாண்டி பனேசர்!!

‘சைகையால் அனைத்தையும் பேசி விடுவார் தோனி’ சிலிர்க்கும் மாண்டி பனேசர்!!
‘சைகையால் அனைத்தையும் பேசி விடுவார் தோனி’ சிலிர்க்கும் மாண்டி பனேசர்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவருடன் இணைந்து விளையாடிய தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர்.

‘தோனி மிக அமைதியானவர். அதிகம் பேசாமாட்டார். அவர் சைகையால் அனைத்தையும் பேசி விடுவார் என நான் நினைக்கிறேன். நாம் என்ன சொன்னாலும் அதற்கு அவர் ரிப்ளை கொடுப்பது கடினம். ஆனால் பேட்டிங் செய்ய வரும் போதும், பீல்டிங் செட் செய்யும் போதும் அவர் வேற லெவலாக செயல்படுவார். 

பொதுவாகவே பந்து வீச்சின் போது பவுலர்களுக்கு அவர் டிப்ஸ் கொடுப்பார். சுழற்பந்து வீச்சாளர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நான் பேட் செய்த போது சுழற் பந்து வீச்சாளர்களுக்கு இந்தியில் டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். 

எனக்கு நன்றாகவே இந்தி தெரியும். இருந்தாலும் அவர் சொல்வது எனக்கு புரியாதது போலவே நடித்தேன்’ என தெரிவித்துள்ளார் பனேசர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com