Published : 30,Jun 2017 06:17 AM

இன்டர்நெட்டில் நிர்வாண படம்: மிரட்டிய கணவன் மீது வழக்கு!

Woman-files-complaint-on-husband


நிர்வாண படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மனைவியை மிரட்டிய கணவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குர்கான் பகுதியை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்து, கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்தார்களாம். சுதாவின் வீட்டில் இருந்து அவ்வப்போது கொடுத்து வந்துள்ளனர். ஒரு அளவுக்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டதால், கணவர் வீட்டில் தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து அங்குள்ள மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சுதா, கணவர் மீது புகார் கொடுத்தார். மனுவில், ‘என் கணவரும் அவர் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினர். கொடுக்க முடியவில்லை என்றால் எனது நிர்வாண படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்கள்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்