[X] Close

2030 க்குள் குறைந்தது 9 கோடி வேலை வாய்ப்பினை இந்தியா உருவாக்க வேண்டும் : மெக்கின்சி

இந்தியா,உலகம்,வணிகம்

India-must-create-at-least-90-million-jobs-by-2030-REPORTS-McKinsey

‘எதிர்வரும் 2030க்குள் இந்தியா குறைந்தது 9 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’ என அமெரிக்காவின் மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Advertisement

image

இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்தியா ஆண்டுக்கு 8 முதல் 8.5 சாதிவிகிதம் வரை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். இது தற்போதைய வளர்ச்சி விகிதத்தினை காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும். அதை செய்யாமல் போனால் பொருளாதார தேக்கநிலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.  


Advertisement

“INDIA’s TURNING POINT” என்ற தலைப்பில் இந்த அறிக்கையை மெக்கின்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

image

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உற்பத்தி துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை செய்தால் மட்டுமே வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க முடியும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 


Advertisement

அதே நேரத்தில் உற்பத்தி திறன் வளர்ச்சியை இந்தியா ஆண்டுக்கு 6.5 முதல் 7.0 சதவிகிதம் வரை பராமரிக்க வேண்டும். ஏனென்றால் உற்பத்தியில் வளர்ச்சி இல்லாமல் வேலைவாய்ப்பை பெருக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close