
2019-ல் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே என் நோக்கம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முரளி விஜய் கூறினார்.
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கும் முரளி விஜய் கூறும்போது, ‘மணிகட்டு ஆபரேஷன் செய்துகொண்டு இரண்டரை மாதங்களாகிவிட்டது. இப்போது ’பிட்’டாக இருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டேன். 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்பது நோக்கம். அதற்காக பயிற்சியில் இருக்கிறேன். கும்ப்ளே- கோலி விவகாரம் பற்றி என்னிடம் கேட்கிறார்கள். நான் அமெரிக்கா சென்றுவிட்டதால் சமீப காலமாக இங்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், கும்ப்ளே இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்தவர். அவர் நல்ல பயிற்சியாளர். அதே போல கோலியும் சிறந்த வீரர். இரண்டு பேருமே இந்திய அணிக்காக, சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். அவர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம்’ என்றார்.