Published : 30,Jun 2017 04:41 AM

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று தொடக்கம்

mgr-centenery-function-starts-today

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் இன்று தொடங்குகிறது. அரசு சார்பில் மாலை 5 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனால், மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஜனவரி வரை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை 32 மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மதுரையில் இன்று தொடக்கவிழா பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது. விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் மதுரை சுற்றுச்சாலையில் பாண்டி கோயில் அருகே தோரண வாயிலுடன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்