Published : 30,Jun 2017 04:25 AM

நள்ளிரவில் ஜிஎஸ்டி அறிமுக விழா: புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

opposition-parties-ignores-gst-inaugration

நாடாளுமன்றத்தில் இன்று நள்ளிரவில் நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திமுகவும், ஜிஎஸ்டி அறிமுக விழா கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

அவசர கதியில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதாக கூறி விழாவை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ‌ஆகிய கட்சிகளும் ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிப்பதாக ‌ஏற்கெனவே அறிவித்துள்ளன.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்