இன்று 3-வது போட்டி: டாப் 3 பார்மால் கோலி மகிழ்ச்சி

இன்று 3-வது போட்டி: டாப் 3 பார்மால் கோலி மகிழ்ச்சி
இன்று 3-வது போட்டி: டாப் 3 பார்மால் கோலி மகிழ்ச்சி

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய அணி டாப் 3 பேட்ஸ்மேன்கள் பார்மில் இருப்பதால் இந்திய அணி தெம்பாக இருக்கிறது. 

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி, மழையால் பாதியில் ரத்தானது. 2 வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுன்டில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணியில் டாப் 3 வீரர்களான தவான், ரஹானே, கேப்டன் விராத் கோலி சிறப்பாக ஆடுவதால் டீம் மகிழ்ச்சியில் உள்ளது. கடந்த போட்டியில் ரஹானே சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். பலம் வாய்ந்த அணியாக திகழும் இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடரும் என தெரிகிறது.

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதுமுகங்களே அதிகம் இருப்பதால் இந்தியாவுக்கு சவால் கொடுக்க முயற்சிக்கிறார்கள். இந்த மைதானத்தில் இந்திய அணி 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com