18 மணி நேரத்திற்குப் பின் கட்டட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

18 மணி நேரத்திற்குப் பின் கட்டட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

18 மணி நேரத்திற்குப் பின் கட்டட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

மகாராஷ்டிராவில‌ ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 4 வயது சிறுவன் 18 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் மஹத் என்ற பகுதியில் உள்ள 5 அடுக்கு கட்டடம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் 45 குடியிருப்புகள் இருந்தன. இதையடுத்து அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது 12 மீட்புக் குழுவினர் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 78 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார். 18 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவனுக்கு தற்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com