பீகார் மாநிலத்தில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பொதுப் போக்குவரத்து இயங்கத் தொடங்கியது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால், கடந்த 5 மாதங்களாக பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ளது.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்த மத்திய அரசு, சமீபத்தில், இ-பாஸ் நடைமுறையை கைவிடும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
பீகார் மாநிலத்தில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவித பணியாளர்களுடன் இயங்கலாம் என்று மாநில அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் பொதுப் போக்குவரத்து இயங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, பீகார் மாநிலத்தில், இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே போக்குவரத்து இயக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பயணம் செய்து வருகின்றனர்.
Loading More post
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!