[X] Close

30 ஆண்டுகளாக தொடரும் உன்னத நட்பு: விஜயகாந்த் பிறந்தநாளில் சரத்குமார் நெகிழ்ச்சி!

தமிழ்நாடு

Noble-friendship-with-Vijaykanth-for-30-years-Sarathkumar-on-birthday
'இன்பத்தில் மனநிறைவையும், துன்பத்தில் ஆறுதலையும் பகிர்ந்து கொண்டு 30 ஆண்டுகளாக தொடரும் உன்னத நட்பு' என நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் சரத்குமார். 
 
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தனது 68வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்  நிறுவனரும் நடிகருமான சரத்குமார், விஜயகாந்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், ''இன்பத்தில் மனநிறைவையும், துன்பத்தில் ஆறுதலையும் பகிர்ந்து கொண்டு 30 ஆண்டுகளாக தொடரும் உன்னத நட்பு. அருமை நண்பர் மற்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 
 

Advertisement

Advertisement
[X] Close