Published : 24,Aug 2020 09:12 PM
கால்பந்து போட்டியில் தங்கள் அணி தோல்வி பெற்றதால் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணி தோல்வியுற்றதால் அந்த அணியின் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக சுமார் 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணியும், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும் மோதின. இந்த போட்டியை பெரிய திரையில் காண பாரீஸில் 5000க்கும் மேற்பட்ட பி.எஸ்.ஜி அணி ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
எப்படியும் தங்கள் அணி வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த பி.எஸ்.ஜி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது அந்த அணியின் தோல்வி. 0 - 1 என்ற கணக்கில் பி.எஸ்.ஜி அணி தோல்வியை தழுவியுடன் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
வன்முறையில் அங்கிருந்த கார்களுக்கு தீ வைத்ததோடு, வணிக வளாகங்களையும் சூறையாடினர். இந்த வன்முறை 16 பேர் காயம் அடைந்துள்ளதாக பாரீஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
வன்முறை தொடர்பாக 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாரீஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.