ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலேசிய தமிழர்கள் இன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது தமிழ் பண்பாட்டைக் காக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தின் எதிரொலியாக மலேசியாவின் பத்துமலையில் உள்ள பிரபலமான 140 அடி உயர முருகன் சிலைக்கு முன், இன்று காலை தங்களின் ஆதரவைக் காட்ட தமிழர்கள் திரண்டனர்.
அதேவேளையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்க கோரும் மனு ஒன்றினை மலேசியாவின் 30 க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகள் ஒன்றிணைந்து கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் நாளைப் பிற்பகலில் வழங்கவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரின் இந்திய வர்த்தக பகுதியான பிரிக்பீல்ட்ஸில் ஜல்லிக்கட்டு தடையை அகற்ற கோரி மலேசிய தமிழர்கள் அதிக அளவில் ஒன்று திரண்டு தங்களது எதிர்ப்பைக் காட்ட ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!