Published : 29,Jun 2017 02:29 PM
சிலை கடத்தல் விவகாரம்: டி.எஸ்.பி காதர்பாட்ஷா பணியிடை நீக்கம்

சிலை கடத்தலில் தொடர்புடைய திருவள்ளூர் டி.எஸ்.பி காதர்பாட்ஷாவை சஸ்பென்ட் செய்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிலை கடத்தலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது சிபிசிஐடி விசாரணை கோரி வழக்கறிஞர் யானைராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சிலை கடத்த தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலிடம், டி.எஸ்.பி காதர்பாட்ஷா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் போதிய அளவு காவல்துறை அதிகாரிகள் உள்ளார்களா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது பதில் அளித்த தமிழக அரசு வழக்கறிஞர் எம்லியாஸ், டி.எஸ்.பி காதர்பாட்ஷா சஸ்பென்ட் செய்யப்பட்டுவிட்டார் எனத் தெரிவித்தார். மேலும், அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.