[X] Close

தேர்வில் தோல்வி... பாதை மாறிய மாணவர்கள்... துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி

இந்தியா

Two--engineering-students-rob-internet-cafe-owner-at-gunpoint-Ghaziabad

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் நகரில் உள்ள இன்டர்நெட் மையத்தில் புகுந்த பொறியியல் மாணவர்கள் இருவர், துப்பாக்கி முனையில் உரிமையாளரை மிரட்டி ரூ. 1.25 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரான சஹரான்பூர் கங்கோ நகரைச் சேர்ந்த மாணவர் சச்சின் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

image


Advertisement

(கோப்பு புகைப்படம்)

சஹரான்பூரில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்துவந்த இருவரும், அண்மையில் கல்லூரியில் நடந்த தேர்வில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். அதனால் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். எளிதாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறையிடம் அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் கொள்ளையடித்த பணமும், அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close