[X] Close

குட்கா லஞ்ச புகாரில் விசாரணை நடைபெறுகிறது: முதலமைச்சர் விளக்கம்

Edappadi-regarding-drug-case-investigation

குட்கா லஞ்ச புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். 


Advertisement

குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெறப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பிய புகாருக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர், " உடலுக்கு ஊறு விளைவிக்கும் மாவா, குட்கா போன்ற போதைப் பொருட்களை  சென்னை காவல்துறையைச் சார்ந்த சில அதிகாரிகள் துணையோடு சமூக விரோதிகள் விற்கவும், தயாரிக்கவும், எல்லாப் பகுதிகளுக்கும் அதனைப் பிரித்து அனுப்புவதாகவும் தகவல் பெறப்பட்டதாக தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக அரசு அக்கடிதம் தொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் விசாரணைக்கு ஆணையிட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார். இந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close