Published : 22,Aug 2020 07:28 PM

டெல்லி: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி எனும் சந்தேகத்துக்குரியவர் கைது, 2 வெடிகுண்டுகள் பறிமுதல்

Suspected-ISIS-Terrorist-Arrested-In-Delhi--2-Bombs-Found--Defused--Police

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி என குற்றம் சாட்டப்பட்ட அபு யூசுப், நேற்று இரவு டெல்லியின் தவுலா குவான் பகுதியில் கைது செய்யப்பட்டார், அவரிடமிருந்து இரு வெடிகுண்டுகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இவர் டெல்லியின் முக்கிய இடங்களில் தனிநபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

image

வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதி என்ற சந்தேகத்திற்குரிய நபர் நேற்று இரவு சிறிய அளவிலான துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார். இதனால் டெல்லி மற்றும் உத்தரபிரதேச எல்லைகளிலும், டெல்லி மற்றும் நொய்டா எல்லையை கடக்கும் வாகனங்களும் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவதாக உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் காவல் அதிகாரிகளால் செயலிழப்பு செய்யப்பட்டன. இந்த நபருக்கு நகரத்தின் அல்லது நாட்டின் பிற பகுதிகளில் கூட்டாளிகள் இருந்தார்களா என்பதை அறியவும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. பெயரிடப்படாத ஆதாரங்களின்படி, பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுபவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ். தளபதிகளுடனும், காஷ்மீர் பயங்கரவாதிகளுடனும் தொடர்பு கொண்டிருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேசத்தின் பால்ராம்பூரை சேர்ந்த அபு யூசுப் காவல்துறையால் இடைமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டபோது உத்தரபிரதேச நம்பர் தகடுகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி, உ.பி, காசியாபாத் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் ஆறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்