[X] Close

பயணிக்கு பிசினஸ் கிளாஸை விட்டுக்கொடுத்து எகனாமிக் கிளாஸில் அமர்ந்த தோனி-வைரலாகும் வீடியோ !

விளையாட்டு

Humble-MS-Dhoni-swaps-his-business-class-seat-with-economy-class-passenger-wins-hearts-yet-again

விமானத்தில் தன்னுடைய பிசினஸ் கிளாஸ் இருக்கையை பயணி ஒருவருக்கு கொடுத்து எகானாமிக் கிளாஸ் இருக்கையில் அமர்ந்த தோனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை அடுத்து 2020க்கான ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடத்துவதற்கான முடிவை எடுத்தது பி.சி.சி.ஐ. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் கடந்த வாரம் சென்னைக்கு வந்து பயிற்சிகளை மேற்கொண்டனர்.

image


Advertisement

இந்நிலையில், தோனி தலைமையில் சென்னை அணியின் சேனைகளான ரெய்னா, ஜடேஜா, சாஹர் உட்பட வீரர்களும், அணி நிர்வாகிகளும் சென்னையிலிருந்து நேற்று அமீரகம் புறப்பட்டனர். விமானத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ஜார்ஜ் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில் "கிரிக்கெட்டில் எல்லா சாதனையும் படைத்த ஒருவர் என்னிடம் வந்து 'உங்கள் கால்கள் மிகவும் நீளமாக இருக்கிறது, நீங்கள் என்னுடைய பிசினஸ் கிளாஸ் இருக்கையில் உட்காருங்கள், நான் எகானமி கிளாஸில் உட்காருகிறேன்' என்று கூறினார். கேப்டன் என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்துவார்" என பதிவிட்டுள்ளார் ஜார்ஜ்.

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close