‘சிஎஸ்கேவில் விளையாட தோனிக்கு என்ன விலையும் கொடுக்க தயாராக இருந்தோம்’  என்.சீனிவாசன்

‘சிஎஸ்கேவில் விளையாட தோனிக்கு என்ன விலையும் கொடுக்க தயாராக இருந்தோம்’ என்.சீனிவாசன்

‘சிஎஸ்கேவில் விளையாட தோனிக்கு என்ன விலையும் கொடுக்க தயாராக இருந்தோம்’ என்.சீனிவாசன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். 

அடுத்த சில நாட்களில் ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடருக்காக பயிற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி.

இந்த சூழலில் 2008இல் ஐ.பி.எல் தொடர் ஆரம்பமான போது தோனியை சி.எஸ்.கே அணிக்காக விளையாட எப்படி தேர்வு செய்தோம் என்பதை பி.டி.ஐ நிறுவனத்துடனான பேட்டியில் தெரிவித்துள்ளார் சென்னை அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன்.

"தங்கள் அணிகளை ரசிகர்களிடையே முன்னிலைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு அணியும் அந்த நகரத்தை சார்ந்த இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக இருந்தன. டெல்லி அணிக்கு ஷேவாக், மும்பை அணிக்கு சச்சின், கொல்கொத்தா அணிக்கு கங்குலி, பஞ்சாப் அணிக்கு யுவராஜ் என நட்சத்திர வீரர்களை அணி உரிமையாளர்கள் ஏலத்தில் எடுப்பதில் அதிக ஈடுபாடு காட்டினர்.

நான் அப்போது எம்.எஸ். தோனிக்கு எந்த விலையானாலும் வாங்க வேண்டுமென்ற தெளிவோடு இருந்தேன். இருப்பினும் தோனிக்கான தொகை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை எட்டியது. மும்பை அணியில் சச்சின் 1.65 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு அணியும் மொத்தமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவு செய்யலாம் என்ற நிலை. அவர்கள் தோனியை எடுக்க விரும்பினாலும் இரண்டு வீரர்களுக்காக மட்டுமே அறுபது சதவிகித தொகையை செலவிட வேண்டியிருக்கும். அவர்கள் அதை செய்யாததால் தோனியை நாங்கள் சி.எஸ்.கே. அணிக்காக எடுத்தோம்’ என தெரிவித்துள்ளார் அவர். 

அதன் பிறகு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடிய ஆட்டங்கள் அனைத்துமே வரலாறு. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com