இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கோயம்புத்தூர்காரர்

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கோயம்புத்தூர்காரர்
இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கோயம்புத்தூர்காரர்

இங்கிலாந்தில் நடைபெற உள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த வீரரை பி.சி.சி.ஐ தேர்வு செய்துள்ளது.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக்கோப்பை கிரிகெட் போட்டிகள் 2018 ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணி தேர்வுகள் நடைபெற்று போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய அணி வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் கோவையை சேர்ந்த கிரிகெட் வீரர் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூனியர் இந்திய கிரிகெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே தென் இந்தியர் இராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடதக்கது. கோவை இராம்நகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராமன் - ராஜேஸ்வரி தம்பதியினரின் மகனான இராதாகிருஷ்ணன், சிறு வயது முதலாக கிரிகெட்டில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும், இவர் தன்னுடைய 5 வயதில் இருந்து அதற்கான கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டதின் காரணமாகவே இந்த இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் பாம்பேவில் நடந்த போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக இராதாகிருஷ்ணன் அடித்த 65 ரன்களே ஜூனியர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை கவர்ந்ததாகவும், அதன் அடிப்படையிலே தற்போது இங்கிலாந்து செல்ல உள்ள ஜூனியர் இந்தியன் அணியில் இராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com