கோவை மாவட்டத்தில் கண்ணாடி பின்னே ரகசிய அறை அமைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று பேரை காவலர்கள் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக முப்பதிற்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவ துவங்கியதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் அங்கு செயல்பட்டு வரும் விடுதிகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் கல்லார் ரயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையில் அங்கு சென்ற போலீசார் முன்புறம் பூட்டிக்கிடந்த விடுதியை திறந்து ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் ஒரு அறையில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடி சற்று பெரிய அளவில் இருந்தது தெரிய வந்தது. சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்தக் கண்ணாடியை அழுத்திய போது கண்ணாடி கதவு போல் திறந்துள்ளது. அதன் பின்னே ஒரு ரகசிய அறை இருந்தது. விசாரணையில் காவலர்கள் ஆய்வில் ஈடுபடும் போது பெண்களை இவ்வறையில் அடைத்து வைத்து விட்டு, அதன் பின்னர் அந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ஒரு பெண் உள்பட தனியார் விடுதியின் காப்பாளர் மற்றும் விடுதி ஊழியர் என மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!