Published : 29,Jun 2017 04:18 AM
ஆக்ஸ்ஃபோர்டில் இடம் பிடித்த 240 இந்திய வார்த்தைகள்

ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் புதிய பதிப்பில் 240 இந்திய வார்த்தைகள் இடம்பிடித்துள்ளன.
ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் 9வது பதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த புதிய பதிப்பில், 240 இந்திய வார்த்தைகள் உட்பட புதிய 900 ஆங்கில வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. சன்னா, தால், கர்ரி லீஃப், கீமா (சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட இறைச்சி) பப்பட், பேல்பூரி உள்ளிட்ட 240 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 60 சதவீதம் ஹிந்தி வார்த்தைகளாகும்.
மேலும், இந்திய உணவு பொருட்கள் உலகளவில் பிரபலமானவையாக இருப்பதால், உணவுப் பொருட்கள் தொடர்பான இந்திய வார்த்தைகள் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.