[X] Close

விளையாட்டாக காட்டு ஆமணக்கு காய் சாப்பிட்ட 11 சிறுவர், சிறுமிகள்: மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு

11-boys-and-girls-who-ate-wild-castor-oil-were-admitted-to-the-hospital

சீர்காழி அருகே 11 சிறுவர் சிறுமிகள் காட்டு ஆமணக்கு காய்களை சாப்பிட்டு வாந்தி பேதியுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புளிச்சக்காடு தோட்டமானியம் பகுதியை சேர்ந்த காவியா-1,கவிப்பிரியன்-9,மணிகண்டன்14,ராகுல்-9,பவதாரிணி-5,நவீண்-12,நித்தீஷ்-9,ஜெயஸ்ரீ-12,கவுதம்-10,பிரிதிவிராஜ்-11,சக்தி சரவணன்-7,உள்ளிட்ட சிறுவர் சிறுமிகள் வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றிந்த நிலையில் வயல் பகுதியில் விளையாடியுள்ளனர்

image


Advertisement

அப்போது அங்கிருந்த காட்டுஆமணக்கு செடியின் காய்களை பறித்து சாப்பிட்டுள்ளனர். நள்ளிரவு அடுத்தடுத்து குழந்தைகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close