திரையில் யோகிபாபு வந்தாலே ரசிகர்களால் சிரிப்பை அடக்கமுடிவதில்லை. கவுண்டமணி, செந்தில், வடிவேலுவைத் தொடர்ந்து யோகிபாபுவுக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் கிடைத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் புனித் ராஜ்குமாருடன் அவர் தோன்றும் படம் சமூக வலைதளங்களில் பரவியது, யோகிபாபு கன்னடப் படவுலகில் காலடி வைக்கிறாரோ என்ற யூகங்களை ரசிகர்களிடம் விதைத்துள்ளது.
மேலும், மூத்த நடிகர் ஷிவ ராஜ்குமாருடன் பாஜ்ரங்கி 2 படப்பிடிப்பில் அவர் இருக்கும் படம் வெளியானபோது அந்த யூகம் தொடர்ந்தது. 2013 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் முதல் பதிப்பு மிகப்பெரும் வெற்றிபெற்றது. புகழ்பெற்ற நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகனுடன் சிறிது நேரம் செலவிட்ட யோகி, அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ள படமும் வெளியாகியுள்ளது. பின்னர் கன்னட நடிகர் துனியா விஜயையும் சந்தித்திருக்கிறார்.
ஊரடங்கு முடிவுக்கு வந்தால் யோகிபாபுவின் படங்கள் தியேட்டரில் அணிவகுத்து நிற்கும். காமெடி காட்சிகளில் மட்டும் நடித்துவரும் யோகிபாபு, சில படங்களில் கதைநாயகனாக நடிக்கும் அளவுக்கு தற்போது உயர்ந்துவருகிறார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix