
விராத் கோலி - அனில் கும்ப்ளே விரிசல் விவகாரம் சரியாக கையாளப்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து மோதலை , பிசிசிஐ இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் கங்குலி கூறியுள்ளார். ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பதை, கிரிக்கெட் ஆலோசனைக் குழு முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.