ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியான டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவரின் இறுதிச் சடங்கை வீடியோகால் மூலம் பார்த்துள்ளனர்
போலீஸ் கட்டுப்பாட்டு அறை பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சஞ்சய் சர்மா(51 வயது). சுதந்திர தினத்துக்கு முன்னதாக நகர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஆகஸ்ட் 7ஆம் தேதி அவர் திரும்பி வந்து, சிவப்பு மண்டல பகுதியிலிருக்கும் சில அதிகாரிகளுடன் பேசிவிட்டு வீடு திரும்பி இருக்கிறார். அன்று இரவு தலைவலி மற்றும் உடல் அசௌகர்யம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறாக இருந்ததால் அவர்களால் மருத்துவமனைக்கு செல்லமுடியவில்லை. அதற்குபிறகு, திங்கள் முதல் வெள்ளி வரை சர்மா மூன்றுமுறை சோதனைக்குச் சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அவரை சோதனை செய்யாமல் விட்டுவிட்டனர்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டத்தை அடுத்து, வசந்த் குஞ்சில் உள்ள இந்தியன் ஸ்பைனல் இஞ்சுரீஸ் மையத்தில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா சோதனை செய்ததில் தொற்று உறுதியானது. அடுத்த நாள் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அவருடைய மனைவி அருணா கூறியிருக்கிறார்.
கடைசியாக ஞாயிற்றுக்கிழமை இரவு வீடியோகால் பேசியிருக்கிறார். அப்போது நன்றாக பேசியதாகவும், தம்ஸ் அப் செய்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவருடைய மனைவிக்கும், மகனுக்கும் தொற்று உறுதியானது. எனவே அவர்களால் கடைசியாக ஒருமுறை கூட சர்மாவைப் பார்க்கமுடியவில்லை என்று சர்மாவின் மனைவி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும்,
சர்மாவின் இறுதிச் சடங்கை அவரது சகோதரர்கள் நடத்தியுள்ளனர். அவருடைய அஸ்தி பாதுகாக்கப்படுவதால், மகன் குணமானவுடன் இறுதிச் சடங்குகளை செய்யவுள்ளளோம் எனத் தெரிவித்துள்ளார்
Loading More post
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!