மதுரையில் சிவப்பு பாதரசத்திற்காக பழைய தொலைகாட்சிப் பெட்டிகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை பாதரசம் தெரியும். அது என்ன சிவப்பு பாதரசம் ? உண்மையில் சிவப்பு பாதரசம் என்ற வேதிப்பொருளே இல்லை. ஆனால் அதைப்பற்றிய கதைகள் ஏராளமாக உள்ளன. சிவப்பு பாதரசம் என்பது அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் பொருள், பூண்டை கண்டால் சிவப்பு பாதரசம் விலகி ஓடும், தங்கத்தைக் கண்டால் ஒட்டிக் கொள்ளும், தீராத நோய்களை எல்லாம் சிவப்பு பாதரசம் தீர்த்துவிடும். சிவப்பு பாதரசம் தங்கத்தைவிட அதிக மதிப்புக் கொண்டது, சிவப்பு பாதரசத்தை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் குவியும் போன்றவை அந்தக் கதைகளில் சில.
வெப் சீரிஸில் அடுத்தடுத்த பாகங்கள் வருவதைப் போல சிவப்பு பாதரச கதையிலும் அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளது. பழைய டி.வி மற்றும் ரேடியோவில் சிவப்பு பாதரசம் இருக்கும் என்பதுதான் அது. மோசடிக்கும்பல் கூறிய பொய்யை உண்மை என்று நம்பி மதுரையைச் சேர்ந்த சிலர் 30-க்கும் மேற்பட்ட பழைய தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து நிலையூர் கண்மாயில் வீசியுள்ளனர்.
மண்ணுளி பாம்பு, இரிடியம் மோசடிகளின் வரிசையில் சிவப்பு பாதரசமும் இடம்பிடித்துள்ளது. சிவப்பு பாதரசம் என்ற பெயரில் ஏதோ ஒரு பொருளையோ அல்லது அதுதொடர்பான வீடியோவையோ காட்டி சில பேர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் 3 கோடி ரூபாய் கொடுத்தால் ஒரு மி.லி. சிவப்பு பாதரசம் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட முயன்ற கும்பல் சிக்கியது நினைவுகூரத்தக்கது.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்