[X] Close

இந்தியாவின் குரலில் அமெரிக்கா பேசுகிறது...பாக்., அமைச்சர் ஆவேசம்

Pakistan-minister-Chaudhry-Nisar-condemns-America

சையத் சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. இந்த அறிவிப்பால் கோபமடைந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் செய்தியாளர்களிடம், ”இந்தியாவின் மொழியில் அமெரிக்கா பேசுகிறது. காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதனை எதிர்த்து போரிடுபவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சர்வதேச சமூகத்தில் அவர்களை இந்தியா அடையாளப்படுத்துகிறது. சர்வதேச நாடுகளுக்கு காஷ்மீரிகளின் ரத்தம் ஒரு பொருட்டல்ல. எந்த மனித உரிமை விதிகளும் அங்கு எடுபடவில்லை” என கூறியுள்ளார்.


Advertisement

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான சையத் சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close