Published : 18,Aug 2020 02:42 PM

‘அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியானவர் அல்ல’ - மிச்சேல் ஒபாமா

TRUMP-IS-THE-Wrong-President-For-Our-Country-SAYS-Michelle-Obama

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர். 

image

இந்நிலையில் அதிபர்  தேத்தலுக்கான பிரசாரங்கள் அங்கு நடைபெற்று வரும் சூழலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடனை ஆதரித்து அண்மையில் பேசினார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா. 

image

‘இந்த நெருக்கடி நிலையின் போது நாட்டை திறம்பட வழிநடத்த அதிபர் டிரம்ப் தவறிவிட்டார். இந்த குழப்பத்தையும், நாம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றால் ஜோ பிடனுக்கு தான் வாக்களிக்க வேண்டும்’ என்று மிச்சேல் ஒபாமா பேசியுள்ளார். 

அவரது  பேச்சு  பரவலாக மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்