Published : 20,Jan 2017 06:40 AM
மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றுவது குறித்து தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று பிரதமரை சந்தித்தார். சந்திப்பின் போது பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் அவசர சட்டம் கொண்டுவர இயலாது. அதேசமயம் இது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு அதரவு தெரிவிக்கும் என கூறினார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வரும் எனக் கூறினார். இதனையடுத்து இது தொடர்பாக ஆலோசிக்க தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது.